தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பக்தியுடன் ஒரு ஸ்தோத்திரம் செய்தாலும் பலன்!

பக்தியுடன் ஒரு ஸ்தோத்திரம் செய்தாலும் பலன்!

பக்தியுடன் ஒரு ஸ்தோத்திரம் செய்தாலும் பலன்!

1


UPDATED : நவ 07, 2026 07:51 PM

ADDED : நவ 07, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 07:51 PM ADDED : நவ 07, 2026 07:47 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள்:

l ‘பகவானை அழைத்தால் அவர் பதிலளிப்பாரா, மாட்டாரா?’ என்றால், ‘திரவுபதியைப் போல அழைத்தால் பகவான் பதிலளிப்பார்’ என்பது பதில்.

l ‘பகவான், நாம் சமர்ப்பிப்பதை ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா?’ எனச் சிலர் கேட்கின்றனர். ‘சபரியைப் போல சமர்ப்பித்தால், நீ கொடுப்பதையும் பகவான் ஏற்பார்’ என்பதே பதில். பகவானைத் தவிர வேறு ஒன்று இல்லை என்ற பக்தி இருந்தால், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்.

கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்களின் சார்பில் துாதுவராக கவுரவ சபைக்குச் சென்றபோது, துரியோதனன், தங்கக் குடத்துடன் கிருஷ்ண பரமாத்மாவை வரவேற்கச் சென்றானாம். அப்போது கிருஷ்ணர், ‘அப்பா... உன்னுடைய வரவேற்பு எனக்கு வேண்டாம்!’ என்று கூறினாராம்.

துரியோதனன் தன்னுடைய அரண்மனையில் தங்கத் தட்டுகளில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தானாம். அப்போது கிருஷ்ணர், ‘அப்பா... உன்னுடைய விருந்து எனக்கு வேண்டாம். நான் விதுரருடைய வீட்டிற்குச் செல்கிறேன்!’ என்று கூறினாராம்.

‘விதுரருடைய வீட்டில் வெள்ளித் தட்டுகளோ, தங்கத் தட்டுகளோ இல்லையே...’ என்று அவன் கூறியபோது, ‘எனக்கு வெள்ளித் தட்டோ, தங்கத் தட்டோ வேண்டாம்; பக்தி தான் தேவை. உன் மனதில், சிறிதளவு கூட பக்தி இல்லை. உன் விருந்து எதற்கு? விதுரர் மனதில், பூரண பக்தி உள்ளது. அவருடைய உபசாரம் தான் வேண்டும்’ என்றாராம் கிருஷ்ணர்.

ஒவ்வொருவரும் பகவானுடைய கருணைக்குப் பாத்திரமாக வேண்டும் என்ற நோக்கத்தில், ஆதி சங்கரர், எண்ணிலடங்காத ஸ்தோத்திரங்களை இயற்றி உள்ளார். அவர் இயற்றியவற்றில் ஏதேனும் ஒன்றை பக்தி பாவத்துடன் பாராயணம் செய்தால், பகவான் அனுக்ரஹம் நிச்சயமாகக் கிடைக்கும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தர்மத்தைத் தொலைத்த நரகாசுரனை ஸம்ஹரித்து உலகோர்க்கருளிய தினமான இந்த தீபாவளி நன்நாளில், எல்லோரும் பகவத்பதாளின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பக்தியை வளர்த்துக் கொள்ளட்டும்.

இந்நன்னாளில் அவதரித்து உலகோருக்கு பல்வேறு விதங்களில் அனுக்கிரஹம் செய்த எங்கள் குருநாதர், தக்ஷிணாம்நாய சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடத்தின் அவிச்சின்ன குருபரம்பரையின் 35வது பீடாதீச்வரர், ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்களை அனைவரும் இத்தினத்தில் ஸ்மரிப்பதன் மூலம் சிரேயஸ்ஸை அடையட்டும் என்றும் ஆசீர்வதிக்கிறோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us