தி.மு.க., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 1 , விடுதலை சிறுத்தைக்கு 2 'சீட்'
தி.மு.க., கூட்டணியில் மதிமுக.,வுக்கு 1 , விடுதலை சிறுத்தைக்கு 2 'சீட்'
UPDATED : மார் 08, 2024 01:55 PM
ADDED : மார் 08, 2024 01:03 PM

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக.,வுக்கு ஒரு தொகுதியும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கூடுதல் இடம் கேட்டதால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று (மார்ச் 7) மதிமுக நிர்வாகக் குழு அவசரமாக கூடியது.
அதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, தொகுதி பங்கீடு பற்றி விவாதித்தனர். இந்த நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் வைகோ. அப்போது திமுக - மதிமுக இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனித்தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

