ADDED : டிச 10, 2024 07:35 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய
தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
தொட்டது துலங்க...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது மாயமான் குறிச்சி. இங்கு ஓடும் சித்ரா
நதிக்கரையோரத்தில் பூர்ணா புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் சித்தா உடையார் தர்ம
சாஸ்தா. இவரை வணங்கினால் தொட்டது துலங்கும். பல ஆண்டுக்கு முன் இவ்வாற்றங்கரை
ஓரத்தில் கோயில் இருந்தது. காலப்போக்கில் வெள்ளத்தால் சிதிலம் அடைந்தது. பின்
பக்தர்கள் சிலர் பின்னமான சிலைகளை எடுத்து வழிபட்டனர். பின் 1998ல் திருப்பணி
செய்யப்பட்டு கும்பாபிேஷகமும் நடத்தப்பட்டது.
திருமணம், குழந்தைப்பேறு கொடுப்பதில் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார் சித்தா
உடையார் தர்ம சாஸ்தா. பங்குனி உத்திரத்தன்று திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமியன்று நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்றால் தொட்டது துலங்கும்.
ஆலங்குளம் மாயமான் குறிச்சியில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: காலை 10:00 - 12:00 மணி
தொடர்புக்கு: 94422 70047
அருகிலுள்ள தலம்: அகரம் மானகவுசிகேசநாதர் 1 கி.மீ.,
நேரம்: காலை: 7:00 - 12:00 மணி

