ADDED : நவ 26, 2024 06:31 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
திருப்பம் உண்டாக...
ஈரோட்டில் பழமையான பூரணாம்பிகை புஷ்பாகலாவுடன் அய்யனார் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வர். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். திருநெல்வேலியில் இருந்து இப்பகுதிக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், இக்காட்டில் சுயம்புவாக இருந்த அய்யனாருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்தனர்.
அப்பரம்பரையினரே இன்றும் கோயில் எழுப்பி வணங்கி வருகின்றனர். இங்கு பரசுராமர், கருப்பண்ணசாமி, முனியப்பன், மதுரைவீரன், காத்தவராயன், சப்த கன்னிமார், முத்து பேச்சியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளன.
இங்கு திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு பூஜை நடக்கும். மகா சிவராத்திரியை முன்னிட்டு 7 நாட்கள் திருவிழா நடக்கிறது.
ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 1:00 மணி மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97889 73849, 98426 46368
அருகிலுள்ள தலம்: ஈரோடு மகிமாலீஸ்வரர் சிவன் கோயில்
நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0424 - 226 7578