sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள் -17

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள் -17

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள் -17

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள் -17


ADDED : டிச 01, 2024 06:38 PM

Google News

ADDED : டிச 01, 2024 06:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

எதிரி பயமா...


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேலம்பாளையத்தில் தர்மசாஸ்தா என்ற அய்யனாரப்பன் அருள் செய்கிறார். கருவறையில் உள்ள அய்யனார் கையில் கத்தியுடன் பூர்ணா, புஷ்கலாவுடன் காட்சி தருகிறார். இவர் எதிரே யானை வாகனம் உள்ளது. தீய சக்திகளுக்கு இவரே சத்துரு என்றும், வியாபாரம், தொழில் விருத்திக்கு இவரே முதலாளி என்றும், திருமண தடை நீக்குவதிலும், குழந்தை பாக்கியம் வரம் கொடுப்பதில் வள்ளல் என போற்றுகின்றனர் பக்தர்கள்.

வளாகத்தில் குதிரை, யானை, நாய் உள்ளிட்ட வாகனங்கள், விநாயகர், சப்த கன்னிமார், பெருமாள், கருப்பனார் ஆகியோர் உள்ளனர். விசேஷ வழிபாடுகள் அமாவாசை, பவுர்ணமியில் நடக்கிறது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாசியில் கருப்பனாருக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை விழா நடக்கும்.

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில் 6 கி. மீ.,

நேரம்: காலை 9:00 - 10:00 மணி.

தொடர்புக்கு: 99767 95354, 97918 74366

அருகிலுள்ள தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நேரம்: காலை 7:00 - 1:00 மணி மாலை 4:30 - 11:30 மணி

தொடர்புக்கு: 94438 26099






      Dinamalar
      Follow us