கூட்டணியில் ஏற்பட்ட பிளவே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம்
கூட்டணியில் ஏற்பட்ட பிளவே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம்
ADDED : பிப் 12, 2025 08:06 PM
கவர்னர் மீது உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீண்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், நீதிபதிகள் கேட்கப்பட்ட கேள்விக்கு கவர்னரும், மத்திய அரசும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்ற காட்சியை இந்தியாவே பார்த்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் எழை, எளிய மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் இல்லை.
பஞ்சமி நில பட்டா ரத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து கூறாதது ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சிக்கந்தர் தர்கா பிரச்னையில் ஹிந்து முன்னணி, பா,ஜ., - ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்த முயன்றன.
டில்லி சட்டசபை தேர்தலில் 2 விழுக்காடு ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி தோல்விக்கு 'இண்டி' கூட்டணியில் ஏற்பட்ட பிளவு ஒரு காரணம்.
பாலகிருஷ்ணன்,
முன்னாள் மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

