ADDED : மார் 15, 2024 10:35 PM
குன்னூர்;குன்னூர் அருகே தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் மாயமானதால் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் 26. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன இன்ஜினியர். இவருடன் சேலம், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் ஐ.டி., ஊழியர்கள், இன்ஜினியர்கள் என நண்பர்கள் 10 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இன்று குன்னூர் கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்றனர்.
இதில் 7 பேர் மலை அடிவார பகுதிக்கு திரும்பி வந்துள்ளனர். மலை பகுதியில் குளவி கூண்டு கலைந்தில் ஓட்டம் பிடித்த 3 பேரில் இருவர் அடிவாரம் வந்தனர்.
இதில் குளவி கடித்து காயமடைந்த வினோத் குமார் 29 குன்னூர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் பிரவீன குமார் இன்று இரவு வரை திரும்பாத நிலையில் மாயமானதால் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தடை செய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

