sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

/

டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

6


ADDED : ஜூலை 19, 2025 04:51 AM

Google News

6

ADDED : ஜூலை 19, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, திருச்சி பாரத் பெல் நிறுவனத்திற்கு, இரும்பு பிளேட் லோடு ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி, நாமக்கல் வழியாக சென்றது. லாரியை, நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த வரதராஜ் ஓட்டினார்.

நாமக்கல் நகருக்குள் டிரெய்லர் லாரி செல்ல முடியாது என்பதால், கரூர் வழியாக புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

நாமக்கல், நல்லிபாளையத்தை சேர்ந்த பூபதி மனைவி சுதா, 43. இவரது மகள் சினேகா, 22. இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, தாய், மகள் இருவரும், 'டி.வி.எஸ்., சுசூகி அக்சஸ்' டூ - வீலரில், கீரம்பூர் எட்டிக்கை அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

வள்ளிபுரம் புறவழிச்சாலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த டிரெய்லர் லாரி, டூ - வீலர் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபுறமாக டிரைவர் திருப்பியுள்ளார். பின், மீண்டும் இடதுபுறம் திருப்பிய போது, மீடியன் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது.

இதில், டூ - வீலரில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவரும், லாரிக்கு அடியில் சிக்கினர். சினேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சுதா, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us