கீழக்கரையில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் கைது உதவி அலுவலரிடம் விசாரணை
கீழக்கரையில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் கைது உதவி அலுவலரிடம் விசாரணை
ADDED : ஜன 09, 2024 02:55 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் சரவணன் 32, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். உதவி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.
கீழக்கரையை சேர்ந்தவர் முரளி 45. நகராட்சி ஒப்பந்ததாரர். மின் மோட்டார் பழுதுநீக்கும் ஒப்பந்த பணி செய்வதோடு மின்சார பல்புகள், உபகரணங்களை நகராட்சிக்கு சப்ளைசெய்து வருகிறார். நகராட்சி கமிஷனரிடம் தனக்கு வர வேண்டிய நிலுவைத்தொகையை கேட்டுள்ளார்.
நகராட்சி உதவி அலுவலர் உதயக்குமார், கணக்கர் சரவணனிடம் காசோலை வழங்க கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். தன்னையும் சரவணனையும் கவனித்தால் மட்டுமே காசோலை வழங்க முடியும் என உதயக்குமார் கூறியுள்ளார். மேலும் ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இது குறித்து முரளி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வழங்கினர். அதனைசரவணனிடம் முரளி வழங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.சரவணனை கைது செய்தனர்.உதயக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.