உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 25, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
டில்லியில் நடந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மழை பற்றாக்குறையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்காமல், தற்போதுள்ள நீர் இருப்பை, குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர். இது, தமிழகத்தின் விவசாய நலனையும், காவிரி நீர் உரிமையையும் புறக்கணிக்கும் செயல்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை, திறந்துவிடாமல் இருப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது. காவிரி நீரை, கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவி பச்சமுத்து
தலைவர், இந்திய ஜனநாயக கட்சி
