கட் அவுட், பேனர் வைத்தால் நடவடிக்கை பாயும்: தி.மு.க.,
கட் அவுட், பேனர் வைத்தால் நடவடிக்கை பாயும்: தி.மு.க.,
ADDED : டிச 06, 2024 06:56 AM

சென்னை : தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு சிரமம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில், 'பேனர், கட் அவுட், பிளக்ஸ் போர்டு'கள் வைக்கக்கூடாது.
பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், ஒன்று அல்லது இரண்டு பேனர்கள், உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாம். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த அறிவுரையை- ஒருசிலர் பின்பற்றாத வகையில் நடந்து கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன. இது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் செயல். வருங்காலங்களில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
இந்த அறிவுரையை யாரேனும் மீறினால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.