ADDED : மே 01, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 53, டில்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பத்ம பூஷண் விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றார். நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் வீடு திரும்புவார் என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து சென்னை திரும்பிய அஜித்குமாரை வரவேற்கவும், பேட்டி எடுக்கவும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுஉள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று அவருக்கு பிறந்த நாள்.