sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கூட்டணியை உடைக்க தன் கட்சியினருக்கு நடிகர் விஜய் 'அசைன்மென்ட்'

/

தி.மு.க., கூட்டணியை உடைக்க தன் கட்சியினருக்கு நடிகர் விஜய் 'அசைன்மென்ட்'

தி.மு.க., கூட்டணியை உடைக்க தன் கட்சியினருக்கு நடிகர் விஜய் 'அசைன்மென்ட்'

தி.மு.க., கூட்டணியை உடைக்க தன் கட்சியினருக்கு நடிகர் விஜய் 'அசைன்மென்ட்'


UPDATED : அக் 20, 2025 01:50 AM

ADDED : அக் 19, 2025 11:35 PM

Google News

UPDATED : அக் 20, 2025 01:50 AM ADDED : அக் 19, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள த.வெ.க., தலைவர் விஜய், அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து, புது அணி அமைக்க முடிவு செய்துள்ளார். அதனால், ஆளுங்கட்சி கூட்டணியை உடைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யும்படியும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்படியும், தன் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களும் அதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கிய நடிகர் விஜய், 'அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி போட்டியிடும்' என்றும் அறிவித்து, விக்கிரவாண்டி மற்றும் மதுரை என இரண்டு இடங்களில் பிரமாண்ட மாநாடுகளையும் நடத்திக் காட்டினார்; அத்துடன் தேர்தலுக்கான பிரசாரத்தையும் துவக்கினார்.

அடுத்தாண்டு பிப்ரவரி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது.

அதிர்ச்சி


அதன்படி, திருச்சியில் துவங்கிய அவரது பிரசார பயணம், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் என நீண்டது. கடந்த மாதம் 27ல் கரூரில் அவர் பிரசாரம் செய்த போது, அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டதால், கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். இது, நடிகர் விஜயை அதிர்ச்சி அடைய வைத்தது.

நெரிசல் சம்பவத்தின் பின்னணியில், பெரும் சதி இருக்கலாம் என விஜய் சந்தேகப்பட்டார். அதனால், த.வெ.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கவும், அதை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

விஜய் கட்சி துவங்கிய போது, 'பா.ஜ., - தி.மு.க., தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கலாம்' என கருதப்பட்டது. ஆனால், த.வெ.க., தலைமையில் தான் கூட்டணி. த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில், கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தருவோம்' என்று விஜய் அறிவித்தார்.

ஆனால், கரூர் சம்பவத்துக்கு பின், அவரது மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேவையானால், 'யாருடனும் கூட்டணி சேரலாம்; தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்; அது தான் ஒரே இலக்கு' என, கட்சியின் முன்னணி தலைவர்களிடம் விஜய் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:



கரூர் சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க., இருக்குமோ என்ற சந்தேகம் விஜய்க்கு உள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை வைத்து, த.வெ.க.,வை முழுமையாக அழித்து விட வேண்டும் என தி.மு.க., தரப்பு செயல்படுவதாகவும் விஜய் நினைக்கிறார்.

அதனால், கட்சி துவங்கிய போது இருந்த கூட்டணி நிலைப்பாட்டிலிருந்து முழுமையாக மாறி இருக்கிறார். அரசியல் ரீதியில், தி.மு.க.,வுக்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தும்படி, கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார்.

காய் நகர்த்தல்



ஆயினும், கட்சியின் முன்னணி தலைவர்களோ, 'வலுவான கூட்டணி கட்டமைப்பில் இருக்கும் தி.மு.க., கூட்டணியை உடைத்து, அங்கிருந்து காங்., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை, த.வெ.க., பக்கம் கொண்டு வந்தாலே போதும்.

' த.வெ.க., தலைமையில் அமையும் புதிய கூட்டணியே, தி.மு.க., கூட்டணியை வீழ்த்தி விடும்' என்று நம்புகின்றனர். இதை விஜயிடமும் சொல்லி, அதற்கேற்ப காய் நகர்த்தல்களை துவங்கி உள்ளனர். இதற்காக, காங்., கட்சியில் இருக்கும் விஜய் ஆதரவு தலைவர்களை முடுக்கிவிட்டு, 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என்ற கருத்தை மையமாக வைத்து, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே, காங்கிரசில் இருக்கும் மூத்த தலைவர்கள் பலரும், தி.மு.க.,வுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, அக்கட்சியோடு கூட்டணி வேண்டாம் என, காங்., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், விஜய் தரப்பில் இருந்து, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம் பேசி உள்ளனர். அவரும், 'தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என்ற சிந்தனையில் இருப்பதால், தலைமையிடம் அதையே வலியுறுத்தி வருகிறார். மேலும் விஜய், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்துவ தலைவர்களும், சோனியா வரை கூட்டணிக்காக நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.

ஒருவேளை, விஜய் நினைப்பது போல த.வெ.க., - காங்., - வி.சி., கூட்டணி அமைந்து விட்டால், தமிழகத்தில் காலம் காலமாக தி.மு.க., பக்கம் சென்று கொண்டிருக்கும் கிறிஸ்துவ ஓட்டுகள் விஜய் பக்கம் வந்து விடும் என, மூன்று கட்சியினரும் முழுமையாக நம்புகின்றனர்.

கூடவே, தலித் ஓட்டுகளும் அக்கூட்டணிக்கு முழுமையாக கிடைக்கும் என்று கணக்கு போடப்படுவதால், அப்படியொரு கூட்டணியை ஏற்படுத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த விஷயத்தில், பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பாதிரியார்களும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள், புதிய கூட்டணிக்காக, கிறிஸ்துவ மக்களை தயார் செய்யும் பணியில் சர்ச்சுகள் வாயிலாக ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம், சித்தாந்த ரீதியில் பா.ஜ.,வுடன் எதிர் நிலையில் விஜய் இருக்கிறார். அதனால், 'அக்கட்சியோடு கூட்டணி இல்லை என்றாலும், தி.மு.க.,வை எதிர்க்கும் விஷயத்தில் பா.ஜ.,வும் உறுதியாக இருப்பதால், அரசியலை கடந்து பா.ஜ.,வோடு நல்ல உறவில் இருக்கலாம்' என்றும், கட்சியின் முன்னணி தலைவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

அதனால், டில்லி சென்ற அவரது கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, பா.ஜ., தலைவர்கள் சிலரை சந்தித்து பேசி, விஜயின் எண்ணத்தை அவர்களிடம் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விஜயின் பிரசாரத்தை, அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us