வீட்டு கடனில் ரூ.7 கோடி பாக்கி நடிகர் பங்களாவுக்கு ஜப்தி 'நோட்டீஸ்'
வீட்டு கடனில் ரூ.7 கோடி பாக்கி நடிகர் பங்களாவுக்கு ஜப்தி 'நோட்டீஸ்'
ADDED : செப் 25, 2025 01:39 AM

சென்னை:நடிகர் ரவி மோகன் பங்களாவை ஜப்தி செய்ய, தனியார் வங்கி சார்பில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் ரவி மோகனுக்கும், சினிமா பட தயாரிப்பாளர் மகள் ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரவியும், ஆர்த்தியும் வசித்த வந்த பங்களாவை, தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று வாங்கி உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இந்த பங்களாவை விட்டு ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய ரவி, வாடகை வீட்டில் குடியேறி விட்டார். மேலும், வங்கி கடனுக்கான தவணை, 7 கோடி ரூபாய்க்கு மேல் கட்டவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ரவி மோகன் பங்களா முகவரிக்கு, தனியார் வங்கி சார்பில் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அதை அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகனின் பங்களாவை ஜப்தி செய்ய, தனியார் வங்கி சார்பில் நேற்று 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு உள்ளது.
இந்த பங்களாவுக்கு ரவி மோகன் வருவது இல்லை என்பதால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரின் அலுவலகத்திலும் நோட்டீஸ் ஒட்ட இரு ப்பதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.