ADDED : பிப் 26, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பூக்குழி திருவிழா நடக்கிறது.
இதையொட்டி நத்தம் கன்னியாபுரம் பகுதியைச் சேர்ந்த, சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகை துஷாரா விஜயன் நேற்று அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.

