ADDED : செப் 21, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.
அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை ( செப்., 22) மாலை 4: 30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக ராதிகா தெரிவித்துள்ளார்.
எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3வது மனைவி தான் கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா. இரண்டாவது மனைவி தனலட்சுமியின் மகன் ராதாரவி ஆவார்.
நடிகை ராதிகாவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

