ADDED : பிப் 04, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பயணியர் தேவையை கருதி, சென்னை - குஜராத் மாநிலம் ஆமதாபாத் உட்பட ஆறு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைந்து இயக்கப்பட உள்ளது.
ஆமதாபாத் - சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் விரைவு ரயில்களில், வரும் 9, 10, 16, 17, 23, 24ம் தேதிகளில், தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது
சென்னை சென்ட்ரல் - குஜராத் மாநிலம் ஏக்தா நகர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்களில், வரும் 7, 11, 14, 18, 21, 25, 28ம் தேதிகளில், தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப் படும்
சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் ஹம்சபர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்களில், வரும் 7, 14, 21, 28ம் தேதிகளில், தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்படும்.