ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது விவகாரம்: பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது விவகாரம்: பெண்ணின் தந்தை வனராஜின் பின்னணி
ADDED : ஜூன் 17, 2025 01:16 AM
திண்டுக்கல் மாவட்டம், விராலிப்பட்டி ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பின், தொழில் முன்னேற்றம் காரணமாக கடமலைக்குண்டு அருகே செங்குளத்தில் தேங்காய் கிடங்கு வைத்து தேங்காய்களை வாங்கி, தமிழகம் முழுதும் விற்பனை செய்தார்.
மதுரையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவன இயக்குநர். இவர், வருஷநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்ய வரும்போது, வனராஜுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதுதவிர, வருஷநாடு மாளிகைப் பாறை கருப்பணசாமி கோவிலிலும் வனராஜாவிற்கு நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.
மாளிகைப்பாறை கருப்பணசாமி கோவிலுக்கு முன்னாள் காவல்துறை இயக்குநர்களாக இருந்தவர்கள் உட்பட பல்வேறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், எம்.எல்.ஏ., -- எம்.பி.,க்கள் வந்து அருள்வாக்கு கேட்டுச் செல்வது வழக்கம்.
இதுபோன்ற சூழலில் வனராஜாவிற்கு கோவில் மூலம் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு கிடைத்திருக்கலாம் அல்லது மகேஸ்வரி வாயிலாக ஏ.டி.ஜி.பி., ஜெயராம் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

