சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு
சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு
UPDATED : ஜன 27, 2025 03:28 PM
ADDED : ஜன 27, 2025 03:27 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், பைக் சாகசத்தில், 17 வயது இளைஞர்கள் இருவர் ஈடுபட்டனர். அப்போது இருவரும் பைக்கில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மோகன்ராஜ், ஹரிஷ் என்பது இரண்டு இளைஞர்களின் பெயர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.