ADDED : டிச 18, 2024 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 230 கோடி ரூபாய் செலவில், 11 ஏக்கரில், 3 லட்சம் சதுர அடியில், 'ஏரோ ஹப்' எனப்படும் வான்வெளி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும், 'டைசல்' நிறுவனமும் இணைந்து உருவாக்கிய, சென்னை ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமைத்து வருகிறது.
இது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, மேம்பட்ட மற்றும் கணினி வடிவமைப்பு மையம், திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பொது வசதிகளை வழங்கும்.
வரும், 2025 ஏப்., முதல் வான்வெளி மையம் செயல்பாட்டிற்கு வரும் என, டிட்கோ தெரிவித்துள்ளது.