'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'
'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'
ADDED : ஜன 10, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:“சென்னையில் பூமிக்கடியில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி விரைவில் முடிவடையும். அதன்பின் நிதி நிலைக்கு ஏற்ப மற்ற இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பொன்னுசாமி: நாமக்கல், கொல்லிமலையில் மழைக் காலங்களில் காற்று வீசும்போது, அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. எனவே, மின் கேபிள்களை பூமிக்கடியில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்: முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சி முழுதும் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணியை நிறைவு செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைவில் முடியவுள்ளது. இதை தொடர்ந்து, மற்ற இடங்களில் பூமிக்கடியில் கேபிள்கள் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

