செங்கோட்டையனை அடுத்து ஓ.பி.எஸ்.,சும் ஆன்மிக டிரிப்
செங்கோட்டையனை அடுத்து ஓ.பி.எஸ்.,சும் ஆன்மிக டிரிப்
ADDED : செப் 09, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ராமபிரானை தரிசிக்க வடமாநில பயணம் செல்வதாக அறிவித்த நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சக்குளத்துக்காவு பகவதி அம்மனை தரிசிக்க சென்றார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வீட்டில் முகாமிட்டிருந்த பன்னீர்செல்வம் சந்திரகிரகணம் முடிந்த நிலையில் சக்குளத்துக்காவு பகவதியம்மனை தரிசிக்க அவரது இளைய மகன் ஜெயபிரதீப்புடன் புறப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ''முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டில்லி செல்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு வந்ததும் பதில் சொல்கிறேன்,'' என்றார்.