ADDED : ஆக 14, 2025 03:20 AM
சென்னை:'டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம்' வருவாய், இந்நிதியாண்டின் மூன்று மாதங்களுக்குள் 22.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதில் அகர்வால் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வலுவான செயல்பாட்டுடன் துவங்கி இருக்கிறோம். இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகர்வால்ஸ் குழுமத்தின் 249 மருத்துவமனைகளில், கடந்த மூன்று மாதங்களில், 78,882 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, மொத்த வருவாய் 501 கோடி ரூபாயுடன், 22.3 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளோம். இதில், இயக்க செயல்பாடுகள் வாயிலாக, 487 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில், 13 கண் மருத்துவமனைகளை துவக்கி உள்ளோம். மேலும், வட மாநிலங்கள், குறிப்பாக டில்லியில் எங்கள் சந்தையை விரிவாக்கம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.