ADDED : அக் 26, 2025 01:18 AM

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், காவல்துறை மீது எந்த தவறும் கிடையாது; எந்த சதியும் நடக்கவில்லை. கரூர் சம்பவத்தில், விஜய்க்கு வக்கீல் போல, அ.தி.மு.க., செயல்படுகிறது; விஜயை கூட்டணிக்காக, கூவி, கூவி அழைக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில், த.வெ.க., இணையாது. விஜய்க்கு, பழனிசாமி பற்றி நன்கு தெரியும். கை கழுவும் நேரத்திற்குள், துரோகம் செய்யக்கூடியவர் பழனிசாமி.
தே.மு.தி.க., கட்சியை விஜயகாந்த் துவங்கியபோது, 2006 தேர்தலில் 6 சதவீத வாக்குகள் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தினார். அதைவிட அதிக வாக்கு சதவீதம் பெற்று, வரும் தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். விஜய்க்கு அரசியல் ஆலோசனை கூறும் அளவிற்கு, அவருடன் அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இல்லை. சரியான கூட்டணி அமைந்தால், தி.மு.க., கூட்டணிக்கு, சரியான போட்டியாக த.வெ.க., கூட்டணி இருக்கும். பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., கூட்டணி, 3வது இடத்துக்கு செல்லும்.
- தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,

