ADDED : நவ 17, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., சார்பில் இன்று நடத்த இருந்த ஆர்ப்பாட்டம், வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., அறிக்கை:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, தி.மு.க.,வினர் பல்வேறு முறைகேடுகளை நடத்துகின்றனர். இதை கண்டித்து, அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் சார்பில், இன்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கன மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால், இன்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் 20ம் தேதி, அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

