தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க.,வின் அடுத்த ‘விக்கெட்’ எம்.எல்.ஏ., நடராஜ்?

அ.தி.மு.க.,வின் அடுத்த ‘விக்கெட்’ எம்.எல்.ஏ., நடராஜ்?

அ.தி.மு.க.,வின் அடுத்த ‘விக்கெட்’ எம்.எல்.ஏ., நடராஜ்?


ADDED : அக் 31, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இன்று (அக்.,31) நடந்தது. கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மாவட்ட கலெக்டர் கந்தசாமி முன்னிலையில், காங்கேயம் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., நடராஜ் பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சி காலங்களில் நெசவாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், குடியிருப்புகள், நிதி ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோல, தற்போது ஆளும் த.வெ.க., அரசும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை, அனைத்து வகையிலும், மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வரும் அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நெசவாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியான சென்னிமலையில், நெசவாளர் பூங்கா அமைத்து தர, அமைச்சர், முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., நடராஜ், அரசு விழாவில், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்டி பேசியது, அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us