தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முதல்வர் விஜய்க்கு தலைக்கனம்: அ.தி.மு.க., கடும் விமர்சனம்

முதல்வர் விஜய்க்கு தலைக்கனம்: அ.தி.மு.க., கடும் விமர்சனம்

முதல்வர் விஜய்க்கு தலைக்கனம்: அ.தி.மு.க., கடும் விமர்சனம்


ADDED : நவ 16, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘மேகதாது அணை விவகாரத்தில், முதல்வர் விஜய் தலைக்கனத்துடன் செயல்படுகிறார்’’ என, அ.தி.மு.க., தலைமை செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மோசமடைந்துள்ளது. த.வெ.க., நிர்வாகிகளே, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், கலெக்டருக்கு அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக, புகார் எழுந்தது. அதன் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறி, தங்கள் எம்.எல்.ஏ.,வை காப்பாற்ற, அமைச்சர் நிர்மல்குமார் முயற்சிக்கிறார். முதல்வர் விஜய், வாய் திறக்கவே மறுக்கிறார். அதேநேரம், த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, கடுமையாக சாடியுள்ளார். இந்த விவகாரத்தை முன்வைத்து, கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மேலும், துணை சபாநாயகர் ரவிசங்கர், மக்கள் பிரச்னைக்காக மனு அளிக்க வந்தவரை தாக்கியுள்ளார். இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 19ம் தேதி, திருச்சி மாவட்டம், துறையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டங்கள், த.வெ.க., அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும்.

மேகதாது பிரச்னையில், முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் தலைக்கனத்துடன் செயல்படுகிறார். தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும் என, ஸ்டாலின் கூறுகிறார்; அதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us