உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 02, 2026 12:00 AM
ADDED : நவ 01, 2026 10:56 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் எஸ்.பி., வெள்ளத்துரை நேற்று அ.தி.மு.க.,வில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்.
அவர் அளித்த பேட்டி: அரசு பணியில் இருந்ததால், அரசியலுக்கு வரவில்லை. தற்போது, ஓய்வு பெற்று விட்டேன். அ.தி.மு.க., ஒரு நிலையான கட்சி என்பதால் இணைந்துள்ளேன்.
எம்.ஜி.ஆர்., வேறு; தற்போது உள்ள முதல்வர் வேறு. இருவரும் நடிகர்கள் என்ற காரணத்தால் அவர்களை ஒப்பிட முடியாது. மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு கூறினார்.
