ADDED : ஏப் 15, 2025 11:54 AM

சென்னை: ''வரும் மே 2ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.