ADDED : அக் 30, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:  மதுரையில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை ஆகிய நகரங்களுக்கு, 'இன்டிகோ' விமான நிறுவனம் சார்பில், தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், இயக்கி வந்த நிலையில், திடீரென அனைத்து சேவைகளையும், நிர்வாக காரணங்களுக்காக நிறுத்துவதாக அறிவித்தது.
இதனால் விமான டிக்கெட் கட்டணம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்து டிச.,1 முதல், பெங்களூரு, டில்லி, சென்னை போன்ற நகரங்களுக்கு, தினசரி விமானங்களை, இயக்க உள்ளதாக, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.

