தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விமான நிலைய ஆணையத்தின் இணையதளம் புதுப்பிப்பு

 விமான நிலைய ஆணையத்தின் இணையதளம் புதுப்பிப்பு

 விமான நிலைய ஆணையத்தின் இணையதளம் புதுப்பிப்பு


ADDED : ஜூலை 10, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய விமான நிலையங்களின் தரவுகளை அறிந்து கொள்ள, aai.aero என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின், விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில், இந்திய விமான நிலையங்கள் தொடர்பான தகவல், மாநிலம் வாரியாக, மாதாந்திர பயணியர் வருகை விபரம் போன்றவை இடம்பெறும்.

விமான நிலையங்கள் வாரியாக, உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் வருகை குறித்த விபரங்களை, ஆணையம் இணையதளத்தில் வெளியிடும். கடந்த சில நாட்களாக இதற்கான அணுமதியை, விமான நிலைய ஆணையம் ரத்து செய்து வந்தது.

தற்போது, இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பயணியர் வருகை விபரங்கள், மீண்டும் வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us