UPDATED : நவ 10, 2026 06:11 PM
ADDED : நவ 10, 2026 06:07 PM

ராமநாதபுரம்: மது போதையில் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிய கருப்பசாமி, 41, என்ற மகனை, அடித்துக் கொன்ற அவரது தாய் அங்குத்தாய், 58, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி இறந்த நிலையில், தாய் அங்குத்தாய் வீட்டில் வசித்தார். தினமும் மது அருந்தி வந்து, வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பதை கருப்பசாமி வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மது அருந்திய நிலையில் கருப்பசாமி, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். அதில், கருப்பசாமிக்கும், அங்குத்தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த அங்குத்தாய், அருகில் கிடந்த கட்டையை எடுத்து, கருப்பசாமி தலையில் அடித்தார். இதில், சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்தார். கேணிக்கரை போலீசார், அங்குத்தாயை கைது செய்தனர்.
