ADDED : நவ 21, 2025 06:45 AM

பணத்தை பாதுகாக்க பா.ஜ.,வுடன் கூட்டணி
உயர்த்திய வரியை குறைத்து விட்டு, அதற்கு விழா எடுத்த ஒரே கட்சி பா.ஜ. மட்டுமே. கடந்த லோக்சபா தேர்தலில், அவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. இதே கணக்கு சட்டசபை தேர்தலிலும் இருக்கும்.
இது, அ.தி.மு.க.,வுக்கும் பொருந்தும். அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார். ஒரே ஒரு ரெய்டை மட்டும் பழனிசாமி உறவினர் வீட்டில் நடத்தினர்.
உடனே, டில்லி சென்று சமரசம் பேசி, கூட்டணி அமைத்துள்ளார். பழனிசாமிக்கு, தமிழக மக்களின் நலனில் அக்கறையில்லை. மக்களுக்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில் அக்கறையில்லை. மக்களிடம் செல்லாக்காசாக அ.தி.மு.க., மாறிவிட்டது. மக்களிடம் கருத்துக் கேட்டால் அ.தி.மு.க., நிலைமை புரியும்.
- -செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,

