ADDED : ஆக 02, 2025 02:05 AM

சென்னை:ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ், ஆடி மாதம் முழுதும் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு நகைக்கும், சிறப்பு பரிசுகளை வழங்குகிறது. இதன் வாயிலாக, ஆடியை அசத்தலான ஆச்சரியங்களால் திருவிழாவாக மாற்றியுள்ளது.
இதுகுறித்து, ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அனந்தபத்மநாபன் கூறியதாவது:
எங்களது, 60 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில், ஒரே எண்ணமே எப்போதும் எங்கள் மனதிற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. யாருக்கு தான் பரிசு பெற பிடிக்காது. அதனால் தான் ஒவ்வொரு ஆடி மாதத்திலும், ஜி.ஆர்.டி.,யில் பரிசு வழங்குவதை, ஒரு மரபாக மாற்ற முடிவு செய்தோம். அதன் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை உருவாக்க விரும்புகிறோம். எனவே, வாடிக்கையாளர்கள் மனம் விரும்பும் நகைகளை, அவர்களுக்காகவோ அல்லது அவர்கள் விரும்பும் ஒருவருக்காகவோ தேர்ந்தெடுங்கள். அவ்வாறு வாங்கும் ஒவ்வொரு பர்சேஸிற்கும், நாங்கள் ஒரு சிறப்பு பரிசை வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இந்த சிறப்புமிக்க ஆடி மாதத்தில், எங்களின் உலகளாவிய கலெக் ஷன்களை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இம்மாதத்தை, குடும்பங்கள் ஒன்று கூடி, மரபுகளை கொண்டாடி, அன்புக்குரியவர்கள் உடன், பரிசுகளை பகிர்ந்து கொள்ளும் தருணமாக நாங்கள் பார்க்கிறோம்.
ஜி.ஆர்.டி.,யின் ஆச்சரிய பரிசுகள், எங்கள் வாடிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு, நாங்கள் நன்றி கூறும் ஒரு வழி. எங்களை பொறுத்தவரை, ஆடி ஆச்சரியம் ஷாப்பிங்கையும் கடந்த ஒரு உணர்வாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.