தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 10:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ‘இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம்’ செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில், 7,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பணி நேரத்தை வரன் முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று இரவு 8:00 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

நேற்று மாலை, நிர்வாகத்துடன் பேச்சு நடந்தது. இன்றும் பேச்சு நடக்க உள்ளது. இதனால், நேற்று இரவு முதல் நடக்க இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக, தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us