ADDED : பிப் 20, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரி வருவாயை பெருக்கவும், வரி ஏய்ப்புகளை குறைப்பதிலும், வணிக வரித்துறைக்கு உதவி செய்ய, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, பெருந்தரவு பகுப்பாய்வு மென்பொருளை பயன்படுத்தி, துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சரக்கு மற்றும் சேவை வரி வருவாயை பெருக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் தரவுகள் பகுப்பாய்வு மையம் ஒன்று, சென்னை வணிக வரி தலைமை அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இந்த புதிய அமைப்பை ஏற்படுத்த, 4 கோடி ரூபாய் செலவிடப்படும்.

