அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்
அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்
ADDED : நவ 06, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைமை செயலர் முருகானந்தத்தை நேற்று மாலை சந்தித்து, பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு புகார் மனு அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி:
அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டசபையில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ம.க.,வுக்கு முறையான அழைப்பு இல்லை. பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனாலும், பா.ம.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முரளிசங்கர், கோபு ஆகியோருக்கும், பா.ம.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை. பா.ம.க.,வின் கருத்தை கேட்காமல், அனைத்து கட்சி கூட்டம் நடத்தியிருப்பது, எங்களை அவமதிக்கும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.

