அண்ணாதுரை நினைவு தினம்; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., அமைதி பேரணி
அண்ணாதுரை நினைவு தினம்; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., அமைதி பேரணி
ADDED : பிப் 03, 2025 08:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அண்ணாதுரையின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைந்தது. இந்த பேரணியில், பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்பட தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் எல்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணாதுரை நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் உள்பட தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

