sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு

/

தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு

தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு

தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு


ADDED : பிப் 16, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 16, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நிகழ்ச்சி வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

தமிழக பா.ஜ. சார்பில் பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:

ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் துவக்கிய 'என் மண் என் மக்கள்' பயணத்தில் சில நாட்களுக்கு முன் 200வது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதிக்குவந்து சேர்ந்தோம். இன்னும் சில நாட்களில் 234 தொகுதிகளை முடித்து கடைசியாக பல்லடத்தில் யாத்திரை முடிவு அடைய உள்ளது.

மக்கள் நேர்மையான அரசியலை எதிர்பார்ப்பதை இந்த பயணத்தில் அறிந்தேன். சாமானிய மனிதனை மையப்படுத்திய ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். எந்தவித லஞ்சம் இல்லாமல் வரிப்பணத்தை அதை மக்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என நினைக்கின்றனர்.

தென்சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ளார். அவரது தந்தையும் அமைச்சராக இருந்தவர். மத்திய சென்னையிலும் அரசியல் வாரிசாகதயாநிதி எம்.பி.யாக உள்ளார். வட சென்னையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி எம்.பி.யாக உள்ளார். இவர்கள் மூன்று பேருக்கும்சாமான்ய மனிதரின் வலி தெரியுமா? அரசியல் குடும்பத்தில் பிறந்து குடும்ப கோட்டாவில் எம்.பி.யானவர்களுக்கு சாமான்ய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

மத்திய அரசு கொட்டித் தருகிறது. ஆனால் மாநில அரசு அதை மக்களுக்கு கிள்ளித் தருகிறது. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையத்தை மாற்றி மக்களை அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.

மோடி ஆட்சிக்கு வந்த போது உலகின் 11வது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருந்தது.பத்து ஆண்டுகளில் உலகின்பெரிய பொருளாதாரநாடாக ஐந்தாவது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 32 மாதத்தில் 2.69 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. முத்ரா திட்டத்தில் பல லட்சம் பேர் தமிழகத்தில்பயன் பெற்றுள்ளனர்.மோடி கையில் தமிழகத்தையும் சென்னையையும் ஒப்படைக்க வேண்டிய நேரமும் காலமும் வந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

ராட்சத மீனும், கருப்புக்கொடியும்


* பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் 20 கிலோ ராட்சத மீன் வழங்கப்பட்டது. மேடையில் இருந்து அண்ணாமலை இறங்கிய போது அக்கட்சி நிர்வாகி ஒருவர்இரட்டைக் குழல் துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கினார். இதனால் நிர்வாகிகள் பதற்றமடைந்தனர்; அது பொம்மை துப்பாக்கி என தெரிந்தும் சிரிப்பலை எழுந்தது.
* வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திரு.வி.க நகர் பேருந்து நிலையம் அருகே கூடி நின்று அண்ணாமலை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்தை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட முயன்றனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்து போலீசார் அப்புறப்படுத்தினர்.








      Dinamalar
      Follow us