ADDED : ஜன 04, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் இருந்து அயோத்திக்கு, வரும் பிப்ரவரி 8ம் தேதி, 'பாரத் கவுரவ்' யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளது.
ஏழு நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக யாத்திரையில், காசி யில் கங்கை நதியில் புனித நீராடி விஸ்வநாதர் - விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம்; கும்பமேளாவை முன்னிட்டு யமுனை, கங்கை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவருக்கு 16,400 ரூபாய் கட்டணம். சைவ உணவு உள்ளிட்ட வசதிகள் இதில் அடங்கும். இதுகுறித்து, மேலும் தகவல் பெற, 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.