ADDED : மே 10, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை காலை 7:55 மணிக்கு மதுரை செல்லும்
மதுரையில் இருந்து, 12ம் தேதி இரவு, 11:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:50 மணிக்கு தாம்பரம் வரும். இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.