இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: பாகிஸ்தானை எச்சரிக்கிறார் நயினார் நாகேந்திரன்!
இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: பாகிஸ்தானை எச்சரிக்கிறார் நயினார் நாகேந்திரன்!
ADDED : மே 15, 2025 10:19 PM

திருச்சி: 'மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடி பேரணி நடத்தப்படும் என பா.ஜ., அறிவித்தது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேசிய கொடி பேரணி நடந்தது. ரயில்நிலையத்தில் இருந்து மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி வரை பாஜவினர் தேசியை கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதற்கிடையே நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பேரணி நடைபெறும். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அவர்களுடன் நாங்கள் என்றும் இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் தான் இந்த பேரணி நடத்தப்படுகிறது.
நீரும், ரத்தமும் ஒன்றாகாது, யாருக்காகவும் போர் நிறுத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மீண்டும் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான் நடக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

