ADDED : நவ 27, 2025 02:11 AM

சென்னை:வீட்டிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும், 'அப்பல்லோ ஹோம் கேர்' திட்டத்தின், 10ம் ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன், மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் இதுவரை, 10 லட்சம் பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தினமும், 2,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.
வீட்டிலேயே பல தொழில் நுட்பங்கள் உதவியுடன், நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், லட்சக்கணக் கான மக்களுக்கு குறைந்த கட் டணத்தில் இச்சேவையை அளித்து வருகிறோம். வீட்டிலேயே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி என்ற நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்பல்லோ மருத்துவ குழும துணை தலைவர் பிரீதா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி ஆகியோர் கூறியதாவது:
பத்து ஆண்டுகள் வெற்றிகரமான சிகிச்சையில், எங்கள் சிகிச்சை தரத்தை மேம்படுத்தி வருகிறோம். எதிர்கால மருத்துவம், வீடுகளை மையமாகக் கொண்டே அமையும். அந்த மாற்றத்தை, அப்பல்லோ தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
கொரோனா பேரிடர் காலங்களிலும், 'அப்பல்லோ ஹோம் கேர்' நிறுவனத்தில், 20,000க்கும் அதிகமானோர் பயன் பெற்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

