ADDED : ஜூலை 07, 2025 03:09 AM
சென்னை: மாநில தகவல் ஆணையர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில், காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிக்கு, தகுதியான நபரை தேர்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திரன் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுஉள்ளனர்.
இக்குழு மாநில தகவல் ஆணையர் பதவிக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படுபவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருக்கலாம்.
விருப்பம் உள்ள தகுதியான நபர்கள், 'பி.செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்., மக்கள் நல்வாழ்வுத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை - 9' என்ற முகவரிக்கு, வரும் 25ம் தேதிக்குள், விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என, தேடுதல் குழு அறிவித்துள்ளது.