ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 03, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்., எனும், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், சமூக அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது.
அந்த வகையில், பொருளாதார மேம்பாடு, நிர்வாகம், சமூக பணிகள், கலாசாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மூத்த நிபுணர்களுக்கு, உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப் படும் ஆராய்ச்சி நிபுணர்களுக்கு, மாதந்தோறும் 45,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களை, https://icssr.org என்ற இணையதளத்தில் அறியலாம்.