நீங்கள் மீண்டும் NEETஅல்லது JEE தேர்வுக்கு தயாராகிறீர்களா? ஆகாஷின் சிறப்புமிக்க ரிப்பீட்டர் பாடத்திட்டத்தினை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
நீங்கள் மீண்டும் NEETஅல்லது JEE தேர்வுக்கு தயாராகிறீர்களா? ஆகாஷின் சிறப்புமிக்க ரிப்பீட்டர் பாடத்திட்டத்தினை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
UPDATED : ஜூன் 24, 2024 04:18 PM
ADDED : ஜூன் 24, 2024 04:15 PM

நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளில் மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆகாஷ் கல்வி நிறுவனம் ரிப்பீடர் தேர்வுகள் மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
மீண்டும் ஒரு வருடம் உங்களை அர்ப்பணிக்கத் தயாரானால் உங்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான கனவு நினைவாவது சாத்தியமே. நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி காண்பது என்பது எளிதான செயலன்று. அதில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுகின்றனர். நுழைவுத் தேர்வுகளை பொறுத்தவரை விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதது மற்றும் மாற்று வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இருக்கின்றார்கள்.
அந்தவகையில் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களும், மறுத்தேர்வு எழுத திட்டமிடும் மாணவர்களும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அத்துடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.
2025ம் ஆண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ரிப்பீட்டர் தேர்வுகள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆகாஷ் கல்வி நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்புகளின் சிறப்பம்சங்கள்:-
ஆகாஷின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகள் மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவர்களது கனவு கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் ரிப்பீட்டர் வகுப்பறை மாணவர் சூரியான்ஷ்.கே.ஆரியன் என்பவர் கடந்த 202-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் இரண்டாவது முயற்சியில் 705 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றுள்ளார். அவரது முதல் முயற்சியில் 592 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இப்போது அவர் போபால் எய்ம்ஸ்-ல் படித்து வருகிறார்.
இவரைத் தொடர்ந்து அஞ்சலி என்ற மாணவி 2022-ம் ஆண்டு நீட் தேர்வில் முதல் முயற்சியாக தேர்வு எழுதி 622 மதிப்பெண்கள் பெற்றார். அவர் ஆகாஷ் கல்வி மையத்தின் ரிப்பீடர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீட் 2023 நுழைவுத் தேர்வில் 706 மதிப்பெண்கள் பெற்று, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான நீட்தேர்வில் முன்னணி இடத்தில்உள்ளார். இப்போது அவர் டெல்லியில் உள்ள எம்.ஏ.எம்.சி-ல் படித்து வருகிறார்.
ஆகாஷ் கல்வி மையத்தின் ரிப்பீட்டர் தேர்வுகளின் வெற்றிக் கதைகள் அதன் தீவிர பயிற்சிகள் பற்றி குறிப்பிடுவதன் நோக்கம் மாணவர்களின் விலை மதிப்பற்ற நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி நுழைவுத் தேர்வு வெற்றியை உறுதியாக்கப்படுகிறது.
தேசிய அளவில் சிறந்த ஆசிரியர் ஒருவரால் 35 ஆண்டுகளாக நடத்தப்படும் பாரம்பரியம் கொண்ட ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் சிறந்த தகுதியும், அனுபவமும் பெற்றவர்கள். அவர்களது பயிற்சி முறைகள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவரும் மாணவர்களது கல்வித் தேவைகளுக்கு பொருத்தமாகஉள்ளது.
சிறந்த நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட உயர் தரமான பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாணவர்களுடைய அனைத்துவித தேவைகளுக்கும், கேள்விகளுக்கும் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை எளிதாக சந்தித்து வெற்றிபெறும் வகையில் அவர்களுடைய முழுமையான புரிதல் உறுதி செய்யப்படுகிறது. அதற்காக பல்வேறு வகை வினாத்தாட்கள், எடுத்துக்காட்டுகள், விளக்கப்படங்கள் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை அனைத்தும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் வல்லுநர்கள் மூலம் மிக கவனமாகவும் நுணுக்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆகாஷ் கல்வி நிறுவன பயிற்சி வகுப்புகள் கடுமையான மதிப்பாய்வு மற்றும் புதுப்பித்தல் முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்களது தேர்வுகளுக்கு தயாராகும் திறனை பெறுகிறார்கள்.
ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி வகுப்புகள் மற்றும் மதிப்பீட்டு அட்டவணை ஆகியவற்றை கண்டு அவர்களுடைய தேர்வுக்கான தயாரிப்பு முறை கண்காணிக்கப்படுகிறது. அதன்மூலம் மாணவர்களுடைய பலவீனமான திறன்கள் சீர் செய்யப்பட்டு வெற்றியை நோக்கி அவர்கள் செல்ல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போபாலில் படித்த ஆகாஷ் ரிப்பீடர் வகுப்பறை மாணவரான சூரியான்ஷ்.கே.ஆரியன் குறிப்பிடும்பொழுது, 'ஒவ்வொருநாளும் என்னுடைய பயிற்சி முறைகளை நான் தொடர்ந்து பரிசோதனை செய்துவந்தேன். அதன்மூலம் என்னுடைய பலம் மற்றும் பலவீனம் எதுவென அடையாளம் கண்டு தேர்வில் வெற்றிபெற்றேன்' என்று தெரிவித்திருக்கிறார்.
நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை மீண்டும் எழுத உள்ள மாணவர்களுக்கு வெற்றி அடைய உதவுவதுடன் பொருளாதார ரீதியாகவும் ஆகாஷ் உதவி செய்கிறது. அந்தவகையில் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் Instant Admission Cum Scholarship Test (iACST) என்ற கல்வி உதவி திட்டத்தின் கீழ் 90 சதவிகிதம் வரை சலுகை பெற்று மாணவர்கள் தங்களுடைய ரிப்பீட்டர் தேர்வுகளில் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நுழைவுத் தேர்வை சந்திப்பவர்கள் பயன் பெறலாம்.
எதிர்வரும் 2025ம் ஆண்டு நீட் அல்லது ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளில் மீண்டும் பங்கேற்று வெற்றி பெற்று பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு மிகச்சரியான வழிகாட்டியை தேர்வு செய்வது மிக அவசியம். அந்தவகையில் ஆகாஷ் நிறுவனத்தின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து தங்களுடைய வெற்றி பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்குஏற்ப தற்போது மாணவர் சேர்க்கை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படுவதுடன் 90 சதவிகிதம் கல்வி உதவித் தொகையும் மாணவர்களுடைய தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. ஆகாஷின் வெற்றி பயணத்தில் சேர்ந்து வெற்றி வாய்ப்பை பெற்று மாணவர்கள் பயனடைய வேண்டும், என்கிறார்கள் ஆகாஷ் நிறுவனத்தினர்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://iacst.aakash.ac.in/iacst-medical-engineering-repeater-courses?utm_source=article&utm_medium=Dinamalar&utm_campaign=Repeater2425