ADDED : செப் 24, 2024 06:38 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த தெளி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, நேற்று மாலை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அஜீஸ் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், ரேஷன் அரிசியை, விழுப்புரம் அடுத்த காணையை சேர்ந்த அன்வர்அலி, 59; என்பவர், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அன்வர்அலியை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.