ADDED : ஜூன் 17, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஆன்லைன் டிரேடிங்' செயலியான, ஆக்டா எப். எக்ஸ் வாயிலாகவும், அந்நிறுவனத்தின் இணையதளம் வாயிலாகவும், 800 கோடி ரூபாய்க்கு மேல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்து இருப்பதற்கான ஆவணங்களை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதையடுத்து, செயலி நிறுவனத்திற்கு சொந்தமான, பல ஊர்களில் உள்ள சொத்துக்கள் உட்பட, 160 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

