ADDED : ஏப் 18, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் , ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து, மொத்தம் 210 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், சிரவை ஆதீனம் குருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, சட்டசபை நிகழ்வுகளை கவனித்தனர்.
சென்னை மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு மனைவி ஆகியோரும், சபை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.