தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பலாத்கார முயற்சி வழக்கு : மூதாட்டி திடீர் சாவு

பலாத்கார முயற்சி வழக்கு : மூதாட்டி திடீர் சாவு

பலாத்கார முயற்சி வழக்கு : மூதாட்டி திடீர் சாவு


ADDED : ஆக 15, 2025 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் பலாத்கார முயற்சியில் பாதிக்கப்பட்ட மூதாட்டி திடீரென உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி. இவர் கடந்த 6 ம் தேதி வீட்டில் தனியாக படுத்திருந்தார்.

அதிகாலை 2:00 மணியளவில், அய்யந்தோப்பு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் பத்மநாபன், 29; என்பவர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார்.

மூதாட்டி சத்தம் கேட்டு, வெளியில் படுத்திருந்த அவரது மகன் ஓடிவந்தார். அதற்குள் அவர் தப்பி சென்றார்.

இதுகுறித்து திண்டிவனம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பத்மநாபனை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட மூதாட்டி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டிலிருந்த மூதாட்டி நேற்று மாலை உயிரிழந்தார்.

திண்டிவனம் டவுன் போலீசார், மூதாட்டியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us